Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Nov 2022 5:06 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#22417

சிமெண்டு உருளைக்குழாயை அகற்றுவார்களா?

மற்றவை

வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் பழைய தேரடி பகுதியில் சாலையோர நடைபாதையிலேயே பல மாதங்களாக உபயோகத்தில் இல்லாத சிமெண்டு உருளைக்குழாய் அகற்றப்படாமல் கிடக்கிறது. இதனால் நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இந்தச் சிமெண்டு உருளைக்குழாயை அகற்றுவார்களா? -கல்யாணராமன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 10:37 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#22414

குரங்குகள் தொல்லை

மற்றவை

கலவையில் அங்காளம்மன் கோவில், கமலக்கண்ணி கோவில் உள்ளது. அந்தக் கோவில்களுக்கு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்தப் பக்தர்களிடம் உள்ள பழம், தேங்காய், பூ ஆகியவற்றை குரங்குகள் பறித்துச் செல்கின்றன. குரங்குகளால் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகவும், அச்சமாகவும் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும். -வெற்றிவேல், கலவை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 10:34 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#22410

புதர், மரங்களை அகற்றுவார்களா?

மற்றவை

வாலாஜாபேட்டை நகர எல்லை நுழைவு வாயில் பகுதியில் வாலாஜா, அம்மூர், சோளிங்கர் போகும் 3 சாலைகள் சந்திக்கும் கூட்ரோட்டின் மத்தியில் உள்ள மேடையில் அதிகளவில் செடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சிக்னலும் ெதரியவில்லை. இரவில் அந்த வழியாக வருபவரிடம் வழிப்பறி நடக்கிறது. 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் வைக்கப்பட்ட செடிகள், பெரிய மரமாக வளர்ந்துள்ளது. இதனால் வேர்கள் ஓடி சாலை சேதம் அடையும். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் செடிகள், புதர்கள், உயரமாக வளர்ந்த மரங்களை வெட்டி...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 10:32 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#22406

போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்

போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்மற்றவை

குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் இருந்து மேல்பட்டி செல்லும் வழியில் சாலையோரம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இரவில் அங்கு வந்து மதுபானத்தை குடித்து விட்டு பாலீத்தின் கவர்களை வீசி எறிகின்றனர். அருகில் கடைகள் திருமண மண்டபங்கள் உள்ளன. அங்கு வருவோருக்கு அச்சமாக உள்ளது. போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு மதுபானம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். -தமிழரசன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 10:29 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#22403

கூடுதல் கவுண்ட்டர் தொடங்க வேண்டும்

கூடுதல் கவுண்ட்டர் தொடங்க வேண்டும்மற்றவை

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் மருந்து, மாத்திரைகள் வழங்க 3 கவுண்ட்டர்கள் உள்ளன. எனினும், மருந்து வாங்கும் இடத்தில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே கூடுதலாக கவுண்ட்டர் தொடங்க வேண்டும். -பிரேம்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 4:56 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#22308

கட்டிட கழிவுகளை அகற்றுவார்களா?

கட்டிட கழிவுகளை அகற்றுவார்களா?குப்பை

ஆரணி கொசப்பாளையம் வேதபுரீஸ்வரர் கோவில் தெரு திருப்பூர் குமரன் தெரு சந்திப்பில் கட்டிட கழிவுகள், ஜல்லி, மணல் ஆகியவை வெளிப்புறத்தில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக நகராட்சி அலுவலர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. கனரக வாகனங்கள் தெருவுக்குள் வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. கட்டிட அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணியம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 4:27 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#22300

ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் அவலம்

மற்றவை

தண்டராம்பட்டு அருகில் உள்ள அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. அந்த ஏரிக்கரையையொட்டி பலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் ஏரியில் அதிகமாக தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. கோர்ட்டு உத்தரவுபடி மாவட்டத்தின் பல்வேறு ஏரிகளில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றி உள்ளனர். அதேபோல் அகரம்பள்ளிப்பட்டு ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். -பிரிட்டோ, அகரம்பள்ளிப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 4:12 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#22293

பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறை வசதி

மற்றவை

வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் போதிய வகுப்பறைகள் இல்லாமல் பள்ளிக்கூடம் இடிந்த நிலையில் செயல்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளிக்கூடத்துக்கு போதிய வகுப்பறை கட்டிடங்களை கட்டித்தர வேண்டும். -புருஷோத்தமன், ஆலங்காயம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 2:18 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#22230

தேங்கிய மழைநீரை வெளியேற்ற வேண்டும்

தண்ணீர்

திருப்பத்தூர் தாலுகா ஆதியூர் காலனி ராஜிவட்டம் பகுதியில் உள்ள நிலங்களில் பல ஏக்கரில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் பாம்புகள் மற்றும் பூச்சிகள் ஊர்ந்து வீட்டுக்குள் வருகின்றன. தேங்கிய மழைநீரை வெளியேற்ற நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் கால்வாய் அமைத்துத்தர வேண்டும். இல்லையெனில், தற்காலிக நடவடிக்கையாக தேங்கிய மழைநீரை வெளியேற்ற வேண்டும். -வக்கீல் கே.ஏ.குணசேகரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 2:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#22227

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் வாத்திமனை பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரபிக், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 12:50 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#22206

பள்ளத்தை மூட வேண்டும்

சாலை

வேலூா மாநகராட்சி 31-வது வார்டு சேண்பாக்கம் நேதாஜி மெயின்ரோட்டில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் முன்பு குழாய் பதிக்க பள்ளம் தோண்டினார்கள். அந்தப் பள்ளத்தை சரியாக மூடாமல் வைத்துள்ளனர். பொதுமக்கள் பணம் எடுக்க செல்லும்போது சிரமப்படுகின்றனர். தோண்டிய பள்ளத்தை முறையாக வேண்டும். -அ.பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 12:24 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#22194

கழிவுநீரை அகற்ற வேண்டும்

கழிவுநீரை அகற்ற வேண்டும்கழிவுநீர்

ஆரணி பழைய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை எதிரே நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்ட பழுதடைந்த 3 சக்கர சைக்கிளின் கீழே கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் விரைந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராகவா லாரன்ஸ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick