Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Nov 2022 11:00 AM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#22584

மின்பாதுகாப்பு கட்டிடத்தை அகற்ற வேண்டும்

மின்பாதுகாப்பு கட்டிடத்தை அகற்ற வேண்டும்மின்சாரம்

வாணியம்பாடி தாலுகா அலுவலகம் பின்னால் பாலாற்றுக் கரை பகுதியில் ெரயில்வே துறைக்கு சொந்தமான கிணறு ஒன்றும், அதற்காக அமைக்கப்பட்ட மின் பாதுகாப்பு கட்டிடமும் உள்ளது. அவை தற்போது பழுதடைந்துள்ளது. அதை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும். -சந்திரசேகர், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 10:57 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#22583

சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கும் அவலம்

சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கும் அவலம்சாலை

ஜோலார்பேட்டை அருகே பக்கிரிதக்கா பகுதியில் கட்டேரி பகுதிக்கு செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கும் மழைநீரை வடிய வைப்பார்களா? -பி.மணிகண்டன், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 10:53 AM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#22582

விடுதிக்கு கதவு வசதி தேவை

மற்றவை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி உள்ளது. அதில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அங்குள்ள கழிவறை, குளியல் அறைகளில் கதவுகள் இல்லை. இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுதாகா், அணைக்கட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 2:07 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#22532

பொது சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் கட்டண பொதுச்சுகாதார வளாகம் உள்ளது. சுகாதார வளாகத்தை சீரமைத்து பல மாதங்கள் ஆகிறது. இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. பயணிகள், பஸ் டிரைவர், கண்டக்டர்கள் சிரமப்படுகின்றனர். சீரமைக்கப்பட்ட பொதுச்சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -சம்பத்து, சமூக ஆர்வலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:48 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#22515

மழைநீரை வெளியேற்ற வேண்டும்

தண்ணீர்

திருப்பத்தூர் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் சு.பள்ளிப்பட்டு ஊராட்சி கீழ்குரும்பர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் அப்பகுதியில் தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழைநீர் வெளியேறாமல் உள்ளது. தேங்கிய மழைநீரை வெளியேற்றி எலவம்பட்டி ஏரிக்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். -பிரவீன், திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 12:25 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#22483

தினத்தந்திக்கு பாராட்டு

மற்றவை

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்றும், குறிப்பிட்ட பிரிவுகளுக்கு டாக்டர்கள் இல்லை என்றும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் தற்போது காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவத்துக்கு டாக்டரை நியமித்துள்ளனர். நடவடிக்கை எடுத்த மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள், நோயாளிகள் பாராட்டு தெரிவித்தனர். -பெ.சிவக்குமார், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 12:20 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#22480

பூங்காவை சீரமைக்க வேண்டும்

பூங்கா

ஆம்பூர் கம்பிகொல்லை பகுதியில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா பராமரிப்பின்றி மின்விளக்குகள், கழிவறைகளில் உள்ள பொருட்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணா, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 11:27 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#22439

பயனற்றுக் கிடக்கும் பள்ளிக்கூடம்

பயனற்றுக் கிடக்கும் பள்ளிக்கூடம்மற்றவை

பேரணாம்பட்டு ஓங்குப்பம் ரோடு பகுதியில் ரூ.5 கோடியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. திறப்பு விழா நடத்தி ஒருசில மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் செயல்பட்டது. அதன் பிறகு பேரணாம்பட்டுக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள பள்ளி கட்டிடம் பல ஆண்டுகளாக பயனற்று மோசமான நிலையில் உள்ளது. அந்தப் பள்ளியில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. பயனற்றுக் கிடக்கும் கட்டிடத்தில் அதிகாரிகள் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம். இல்லையெனில், மீண்டும் பள்ளியை தொடங்கி நடத்தலாம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 10:55 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#22431

கழிவுநீர் ஏரியில் கலக்கும் அவலம்

கழிவுநீர் ஏரியில் கலக்கும் அவலம்கழிவுநீர்

வந்தவாசிைய அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் ஏரி அருகில் குடியிருப்புகள் உள்ளன. அந்தப் பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறி ஏரியில் கலக்கிறது. கழிவுநீர் ஏரியில் கலப்பதால் ஏரி மாசடைந்து மீன்கள் இறந்து விடுகின்றன. ஆடு, மாடுகள் ஏரி தண்ணீரை குடிப்பதால் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. கழிவுநீர் ஏரியில் கலக்காமல் தடுக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 10:52 AM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#22430

வேகத்தடை அமைக்க வேண்டும்

வேகத்தடை அமைக்க வேண்டும்மற்றவை

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஊராட்சியில் வீரகோவில் வழியாக படவேடு கிராமப்புற சாலை செல்கிறது. இந்தச் சாலையில் மேற்கே கோட்டைமலை செல்லும் சாலை பிரிகிறது. இச்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் கோட்டைமலை அடிவாரம் சென்று, அங்கிருந்து 7 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை வழியே நடந்து சென்றால் வேணுகோபாலசாமி கோவிலை அடையலாம். படவேடு வீரகோவில் பகுதியில் இச்சாலை, படவேடு சாலை இணையும் இடத்தில் மோட்டார் சைக்கிள் உள்பட பல வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதனால் வாகனங்களை கட்டுப்படுத்த கோட்டை மலை சாலை படவேடு சாலை பகுதியில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 10:44 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#22425

நாய்கள் தொல்லை

மற்றவை

கண்ணமங்கலம் புதிய சாலை பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் சில கடைகள் உள்ளன. அங்கு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் கூட்டமாக நின்று சண்டையிடுகின்றன. அப்போது அந்த வழியாக செல்வோரை கடிக்க வருகின்றன. நாய்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. எனவே பேரூராட்சி நிர்வாகம் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து காட்டில் விட வேண்டும். -ரேணுகாம்பாள், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 10:41 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#22421

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள்

மற்றவை

வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள் பல்வேறு ஊர்களுக்கு வேலைக்காக பஸ்களில் சென்று வருகின்றனர். பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இதனால் பொதுமக்கள், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலசுந்தரம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick