Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Dec 2022 11:13 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#22824

குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்

தண்ணீர்

கலவை பேரூராட்சியில் அங்காளம்மன் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அதில் இருந்து வரும் குடிநீர் ஒரு விதமான துர்நாற்றத்துடன் வருகிறது. எனவே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுத்தம் செய்து தண்ணீர் வினியோகிக்க வேண்டும். தொட்டிையச் சுத்தம் செய்யும் தேதி, கிழமைைய தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். -மணிகண்டன், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 6:00 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#22823

சாலையை விட உயரமான மூடி

சாலையை விட உயரமான மூடிசாலை

திருப்பத்தூர் நகர பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் பைபர் கேபிள் அமைக்கும் பணியை செய்து வருகிறது. இதற்காக சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிவடைந்து பள்ளத்தை மூட இரும்பு மூடி பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த மூடி சாலையை விட அதிக உயரத்தில் உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஏறி இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக திருப்பத்தூர் சின்னக்கடை பஜார் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதுபோல் அமைந்துள்ளனர். எனவே சாலையில் சமதளவில் மூடி வைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 11:04 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#22822

சுற்றுச்சுவர் சேதம்

சுற்றுச்சுவர் சேதம்மற்றவை

வள்ளிமலையை அடுத்த விண்ணப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அந்தச் சுற்றுச்சுவர் சேதம் அடைந்துள்ளது. சேதமான சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும். -ஜெயவேல், வள்ளிமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 1:42 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#22664

பள்ளிக்கட்டிடம் சேதம்

பள்ளிக்கட்டிடம் சேதம்மற்றவை

ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை பகுதியில் ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளி உள்ளது. அதில் ஒரு பகுதி கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. அதில் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. தற்போது பயனற்ற நிலையில் இருக்கும் அந்தப் பள்ளிக்கூட கட்டித்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 12:42 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#22645

சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலை

திருப்பத்தூரில் கச்சேரி தெரு, வட அக்ரஹாரம், கிருஷ்ணகிரி மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய, தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளுக்கு மோட்டார்சைக்கிள்கள் நிறுத்தும் இடம் இல்லாததால் வங்கிகளுக்கு முன்பு உள்ள மெயின் ரோட்டை ஆக்கிரமித்து அதிக அளவில் நிறுத்துகின்றனர். அப்பகுதியில் மருத்துவமனை உள்ளதால், ஆம்புலன்சுகள் வர முடிவதில்லை. உடனடியாக வங்கிகள் தங்களின் வாடிக்ைகயாளர்களுக்கு வாகன நிறுத்துமிடத்தை ஏற்படுத்தி கொடுக்க ேவண்டும். -சுரேந்திரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 12:21 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#22635

ஆபத்தான மின் கம்பம் மாற்றப்படுமா?

ஆபத்தான மின் கம்பம் மாற்றப்படுமா?மின்சாரம்

அரக்கோணம் நாகலம்மன் நகர் முதல் வாணியம்பேட்டை வரை செல்லும் ஜி.கே.என் நகர் பகுதியில் (பட்டேல் ரோட்டில்) பிரதான சாலையில் உள்ள குடியிருப்பு அருகே சிமெண்டு மின் கம்பம் ஒன்று விரிசல் ஏற்பட்டு கம்பி வெளியே தெரியும் படி ஆபத்தான நிலையில் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ்குமார், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 12:13 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#22625

தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடியில் இருந்து வேலூருக்கு வரும் பாலத்தில் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையின் ஒரு பக்கத்தில் தடுப்புச் சுவர் உடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால் நடைபாதை வழியாக வரும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து உடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும். -மாலன், வேலூா்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 12:03 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#22621

சாலையில் ஓடும் கழிவுநீர்

சாலையில் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

திருவண்ணாமலை தாலுகா மாதலம்பாடி கிராமத்தில் கருணீகர்தெரு, அம்மன் கோவில் தெரு இணைப்பு பகுதியில் அங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. பள்ளமாக பகுதியில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் இருந்து ஓடைக்கார தெருவை சாலையின் இரு பக்கமும் கழிவுநீர் கால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -என்.சின்னத்துரை, மாதலம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 11:31 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#22593

தார் சாலை சேதம்

தார் சாலை சேதம்சாலை

காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ரேஷன் கடை, நூலகம் கால்நடை மருத்துவமனை உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன. ஆலப்பாக்கம் பகுதியில் இருந்து துரைபெரும்பாக்கம் ஊராட்சி வழியாக காவேரிப்பாக்கம் செல்லும் தார்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது அந்தத் தார்சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பெரிய பெரிய பள்ளமாக காணப்படுகிறது. அந்தப் பள்ளத்தில் மழைநீா் தேங்கி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 11:15 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#22588

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்

மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி மோட்டூர் கிராமத்தில் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு சொந்தமாக வீட்டுமனை இல்லை. எங்கள் கிராமத்தில் உள்ள அனாதீனம் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அன்பரசு, குனிச்சிமோட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 11:07 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#22586

ரெயில்வே சுரங்கப்பாதையில் மின் விளக்கு வசதி

ரெயில்வே சுரங்கப்பாதையில் மின் விளக்கு வசதிசாலை

அரக்கோணம் ரெயில்வே சுரங்கப்பாதையில் ஒரு மின் விளக்குக்கூட இல்லை. இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்வோர் அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுரங்கப்பாதையில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். -சு.சுந்தரமூர்த்தி, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 11:02 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#22585

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. ஒருசில மாடுகள் சாலையோரம் படுத்துக் கொள்கின்றன. அந்த வழியாக இரவில் வாகனங்களில் வேகமாக வருவோர் மாடுகள் மீது மோதி கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். மாடுகளை சாலையில் விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். -சுப்பிரமணி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick