Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Dec 2022 10:49 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#23273

கடைகளுக்கு செல்ல இடையூறு

கடைகளுக்கு செல்ல இடையூறுமற்றவை

ஆரணி காந்தி மார்க்கெட் ரோட்டில் நகராட்சி மாடி கடைகளுக்கு செல்லும் படிக்கட்டுகளில், அப்பகுதியில் உள்ள பழ வியாபாரிகளின் பொருட்களை வைக்கும் குடோனாக மாறி வருகிறது. அழுகிய பழங்கள், பழக்கூடைகளுடன் வரும் பேப்பர் கழிவுகளை அங்குப்போடுகிறார்கள். இதனால் சுகாதாரச் சீர்கேடாக உள்ளது. நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து படிக்கட்டுகளில் உள்ள குப்ைபகளை அகற்ற ேவண்டும். -பழனி, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 10:40 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#23272

பள்ளங்களை சரி செய்வார்களா?

பள்ளங்களை சரி செய்வார்களா?சாலை

வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகின்றன. அந்த வழியாக அதிகமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இதனால் இரவில் அவர்கள் பள்ளத்தில் விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சீனிவாசன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 10:35 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#23271

சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து

சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்துசாலை

கே.வி.குப்பம் பஸ் நிலையம்-சந்தைமேடு இடையே காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அப்பகுதிகள் அகலமாகக் காணப்படுகிறது. இதன் ஓரங்களில் நாள் முழுவதும் கனரக வாகனங்களை நிறுத்தும் இடமாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சாலைகளில் நெரிசல், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கரியமால், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 10:32 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#23270

சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்

சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

சோளிங்கரை அடுத்த ஆயில் ஏரிக்கரையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சாலை சுமார் 6 அடி அகலம், 50 நீளத்துக்கு சரிந்து சேதமடைந்தது. இந்தச் சாலை தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்கின்றனர். இரவில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விபத்தைத் தடுக்கும் வகையில் இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும். -பாஸ்கர், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 10:28 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#23269

போலீஸ் நிழற்குடை அமைக்க வேண்டும்

மற்றவை

வாலாஜாபேட்டை பஸ் நிலைய வளாகத்தில் 4 நுழைவு வாயில் பகுதியில் தனியார் பஸ்கள் ஒழுங்கில்லாமல் கண்ட இடங்களில் இஷ்டம்போல் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் அவதிப்படுகின்றனர். பஸ் நிலையப் பகுதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்த பஸ் நிலைய மையப் பகுதியில் போலீஸ் நிழற்கூடம் அமைக்க வேண்டும். இதுகுறித்து போக்குவரத்துப் போலீசார் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -தாஸ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 10:25 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#23268

கால்வாய் தடுப்பு அமைக்கப்படுமா?

கால்வாய் தடுப்பு அமைக்கப்படுமா?கழிவுநீர்

காட்பாடி கழிஞ்சூர் ஏரி அருகே பெரிய அளவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் ஓரம் வீடுகள் கட்டி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கால்வாயின் ஒரு சில பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாததால் வீடுகள் முன்பு கழிவுநீர் செல்லும் அவலம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் ஓரம் கழிவுநீர் செல்லாமல் இருக்க கான்கிரீட் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 5:31 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#23223

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

ஜோலார்பேட்டையை அடுத்த டி.வீரப்பள்ளி பகுதியில் நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் குடியானகுப்பம் பகுதிக்கு செல்லும் கூட்ரோடு சாலை குண்டு குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பல முறை தகவல் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்வார்களா? -இல.குருசேவ், கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 3:27 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#23142

ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்தண்ணீர்

திருப்பத்தூர் அருகே மொளகரம்பட்டி பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இதன் வழியாக குனிச்சி அண்ணாநகர், எம்.ஜி.ஆர். நகர், மொளகரம்பட்டி, செவ்வாத்தூர், புதூர், எலவம்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தினமும் குனிச்சி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். கடந்த மாதம் பெய்த கனமழையால் ரெயில்வே சுரங்கப்பாதையில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 12:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#23063

மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்

மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்மற்றவை

ஆம்பூர் கஸ்பா பகுதியில் இரவில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் தொடர் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாஸ்கர், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 12:05 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#23060

பகலில் எரியும் மின் விளக்கு

மின்சாரம்

பேரணாம்பட்டு திரு.வி.க.நகர் பாண்டியன் வீதி 3-ல் கடைசியில் தபால் நிலையம் அருகே உள்ள தெரு மின் விளக்கு பகல் நேரத்தில் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. காலை பொழுது விடிந்ததும் தெரு மின் விளக்கை அணைக்க அதிகாரி முன்வர வேண்டும். -ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 11:31 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#23059

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

கண்ணமங்கலம்-வேலூர் செல்லும் சாலையில் உள்ள கூட்ரோட்டில் ரெயில்வே கேட் பகுதியில் கடந்த மாதம் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்தது. சீரமைக்கப்பட்ட தண்டவாளத்தில் சிமெண்டு சிலாப்கள் மட்டும் அமைத்து தார் அமைக்கப்படாததால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சிரமப்பட்டன. இதுகுறித்து கடந்த மாதம் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி ெவளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் தண்டவாளத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். செய்தி ெவளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 11:27 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#23058

பாலாற்றில் குப்பைகள் கொட்டும் அவலம்

பாலாற்றில் குப்பைகள் கொட்டும் அவலம்குப்பை

வேலூர் பாலாற்றில் ஆங்காங்கே மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் பாலாறு முழுவதும் குப்பைகள் நிறைந்த பகுதிகளாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட தெருக்களில் குப்பைகளை சேகரித்து ஊழியர்கள் ஒரு சிலர் புதிய பஸ் நிலையம் முத்து மண்டபம் அருகே உள்ள பாலாற்றில் குப்பைகளை கொட்டுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick