Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Dec 2022 11:24 AM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#23057

சாராய கடத்தலை தடுப்பார்களா?

சாராய கடத்தலை தடுப்பார்களா?மற்றவை

தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள வெலதிகமாணிபெண்டா என்ற இடத்தில் தமிழக காவல்துறையும், ஆந்திர மாநில காவல் துறையும் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. ஆனால் அந்த வழியாக தினமும் பல்வேறு வகையான வாகனங்களில் ரேஷன் அரிசி மற்றும் சாராயம் கடத்தப்படுகிறது. இதைத் தடுக்க இருமாநில அரசுகள் முன்வர வேண்டும். -அண்ணாமலை, வெலதிகமாணிபெண்டா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 11:14 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#23056

நாய்களால் இடையூறு

நாய்களால் இடையூறுமற்றவை

ஆரணி கோட்டை மைதானத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். அங்கு சுற்றித்திரியும் நாய்கள் அவர்களுக்கு அச்சுறுத்தலாகவும், இடையூறாகவும் உள்ளன. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். -திருமால்சுந்தரம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 11:11 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#23055

சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்

சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்மற்றவை

சோளிங்கரை அடுத்த கூடலூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இந்தச் சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் வைத்துள்ளனர். இதனால் கட்டிடம் முழுவதும் சேதமடைந்துள்ளது. அதைச் சுற்றி புல், பூண்டுகள், புதர்கள் வளர்ந்துள்ளது. சுகாதார வளாகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். -சக்கரவர்த்தி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 11:01 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#23053

சாலையை சீரமைப்பார்களா?

சாலையை சீரமைப்பார்களா?சாலை

காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் பின்பக்கம் சாலை உள்ளது. பஸ் நிலையம் அருகில் உள்ள கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்தச் சாலையில் ஓடி தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 10:55 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#23052

எரிவாயு தகன மேடையை திறப்பார்களா?

எரிவாயு தகன மேடையை திறப்பார்களா?மற்றவை

ஆற்காடு நகராட்சி பகுதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.67 லட்சத்தில் எரிவாயு தகனமேடை கட்டிடம் கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. எரிவாயு தகன மேடையை மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 10:49 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#23051

சாலை அமைக்காததால் மக்கள் அவதி

சாலை அமைக்காததால் மக்கள் அவதிசாலை

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் 2, 6-வது தெருக்களில் சாலை போட முன்னேற்பாடு பணி நடந்தது. அந்தப் பணியை முடித்து பல மாதங்கள் ஆகின்றன. ஆனால் இன்னும் சாலை பணியை தொடங்கவில்லை. அந்த வழியாக நடந்தும், வாகனங்களிலும் மக்கள் செல்ல சிரமப்படுகின்றனர். சாலை போடாமல் வாட்டி வதைக்கும் மாநகராட்சி நிர்வாகம் சாலை பணியை விரைவில் தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெங்கடேஸ்வரன் செல்லப்பன், சத்துவாச்சாரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 10:26 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#23049

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

வேலூரை அடுத்த வள்ளலார் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி அருகில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கட்டுமானத்துக்கு தேவையான ஜல்லிகலவைகள் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வாகனங்கள் இருபுறமும் வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஜல்லி கலவைகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண்குமார், ரங்காபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 10:19 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#23047

பயணிகள் நிழற்கூடம் சேதம்

பயணிகள் நிழற்கூடம் சேதம்மற்றவை

ஆரணி தாலுகா சேவூர் பைபாஸ் சாலையில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அதில் இருந்த சிமெண்டு ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு, சுகாதாரச் சீர்கேடாக உள்ளது. இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்கூடத்தை சீரமைத்துக் கொடுக்க வேண்டும். -ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 10:14 AM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#23045

கிணற்றுக்கு மூடி போட வேண்டும்

கிணற்றுக்கு மூடி போட வேண்டும்மற்றவை

கலசபாக்கம் தாலுகா மேல்பாலூர் காலனி மாரியம்மன் கோவில் 2-வது தெருவின் மையப்பகுதியில் பொதுக்கிணறு உள்ளது. அந்தக் கிணற்றில் முதியவர் ஒருவர் தவறி விழுந்து விட்டதால், கிணற்றுத் தண்ணீரை பயன்படுத்தாமல் பாழடைந்து விட்டது. மீண்டும் உயிர் சேதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கிணற்றுக்கு மூடி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆர்.சிவக்குமார், மேல்பாலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:06 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#22981

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

நாட்டறம்பள்ளியை அடுத்த எல்வப்பள்ளி கூட்ரோடு அருகே நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் செல்லும் சாலையோரம் உள்ள ஒரு மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சு உதிர்ந்து எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? -இல.குருசேவ்.கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 6:06 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#22950

காலதாமதமாக புறப்பட்ட பஸ்சால் பயணிகள் அவதி

போக்குவரத்து

திருப்பத்தூரில் இருந்து செட்டேரி டேம் பகுதிக்கு அரசு டவுன் சென்று வருகிறது. நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்கு அந்தப் பஸ் வந்தது. அந்தப் பஸ்சில் மகளிருக்கு கட்டணம் கிடையாது. அந்தப் பஸ்சில் ெபண்கள் பலர் ஏறினர். பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 6.30 மணிக்கு எடுக்க வேண்டிய பஸ்சை இரவு 8 மணி வரையும் எடுக்கவில்லை. இதனால் பஸ்சில் ஏறி அவதிப்பட்ட பெண்கள் கண்டக்டரிடம் கேட்டபோது உங்களுக்கு பதில் சொல்ல முடியாது என அலட்சியமாகக் கூறினார். பெண்களுக்கு இலவசம் என்பதாலும்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 2:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#22922

கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

கழிவுநீர்

ஆம்பூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் நீண்ட நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் ெசல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடை கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -சக்தி, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick