Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Dec 2022 10:53 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#23509

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்குப்பை

காட்பாடி மோட்டூர் நகர் வேங்கையம்மன் கோவில் அருகே உள்ள சாலையோரம் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் வீசப்பட்டு குவிந்துள்ளது. அந்தச் சாலையில் ஒரு சில இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும், அங்குள்ள பள்ளங்களை மூடி சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரன், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 10:47 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#23508

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

வேலூர் ஓட்டேரியில் அரசு கலைக் கல்லூரி, தனியார் பள்ளி மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. அங்குள்ள சாலை போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையாகும். அந்தச் சாலையில் வெகுதூரம் பள்ளங்களும், சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இரவில் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து செல்லும் அவலநிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஓட்டேரி சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 10:43 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#23507

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

சோளிங்கர் நகராட்சி உட்பட்ட கருமாரியம்மன் கோவில் கூட்டுச் சாலை, பஸ் நிலையம், தக்கான் குளம், வாலாஜா சாலை, சித்தூர் சாலை வாரச்சந்தை ஆகிய பகுதிகளில் கால்நடைகள் அதிமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலைகளில் கால்நடைகள் திரிய விடும் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பசுபதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 2:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#23398

ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் அவதி

மற்றவை

திருப்பத்தூர் அருகே உள்ள மொளகரம்பட்டி கிராமம் அருகே ெரயில்வே சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இந்தச் சுரங்கப்பாதையில் தற்போது பெய்த மழையால் 4 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதியைச் சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் ஆபத்ததை உணராமல் ெரயில் தண்டவாளம் மீது ஏறி செல்கின்றனர். ஆகையால் ெரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றி மக்கள் போக்குவரத்துக்கு வழி வகை செய்ய வேண்டும். -ராமலிங்கம், மொளகரம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 1:30 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#23357

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை நகரின் முக்கிய பகுதிகளாக போளூர் சாலை, மத்திய பஸ் நிலையம், சின்ன கடை வீதி, மாடவீதி, தண்டராம்பட்டு சாலை, செங்கம் சாலை உள்ளிட்டவை உள்ளன. இந்த பகுதிகளில் பகல் மற்றும் மாலை நேரங்களில் அவ்வபோது சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் இவற்றினால் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே இது குறித்து நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்க வேண்டும்.- ராஜா,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 1:14 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#23352

திறந்தவெளி கால்வாயை மூட வேண்டும்

திறந்தவெளி கால்வாயை மூட வேண்டும்கழிவுநீர்

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கீழாண்டமோட்டூர் கிராமத்தில் திருத்தணி செல்லும் சாலையில் இருபுறமும் திறந்த வெளி பாசன கால்வாய் கட்டுமான பணிகள் நடந்து 2 வருடத்துக்கு மேல் ஆகியும் இதுவரை கால்வாய் மூடாமல் திறந்தவெளியாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறுவர்கள், கால்நடைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. திறந்த வெளி கால்வாயை மூட வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 1:03 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#23334

மின்கம்பம் பழுது

மின்கம்பம் பழுதுமின்சாரம்

ஜோலார்பேட்டையை அடுத்த வெங்காயப்பள்ளி பகுதியில் சாலையோரம் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் கம்பம் சிமெண்டு பூச்சு உதிர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. உள்ளே உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்க வில்லை. இனியாவது நடவடிக்கை எடுத்து கம்பத்தை மாற்றி அமைப்பார்களா? -கே.எஸ்.பழனி, ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 12:32 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#23307

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் கஸ்பா பகுதியில் அரசு பள்ளி உள்ள சாலை மிகவும் மோசமாக சேறும் சகதியுமாக மேடு பள்ளமுமாக உள்ளது. மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாஸ்கர், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 12:17 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#23287

சாலையை சரி செய்வார்களா?

சாலையை சரி செய்வார்களா?சாலை

கண்ணமங்கலம் அருகில் கல்பட்டு கிராமத்தில் இருந்து 1.7 கிேலா மீட்டர் தூரம் வரை உள்ள சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. பின்னர் ஜல்லி சாலையாக போடப்பட்டது. தற்போது தார் சாலையோ சிமெண்டு சாலையோ அமைக்கவில்லை. தற்போது பெய்த மழையால் சாலை மோசமாக உள்ளது. குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் செல்ல சிரமமாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பொன்னுசாமி, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 11:34 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#23277

உயர்கோபுரமின்விளக்கை சரி செய்ய வேண்டும்

உயர்கோபுரமின்விளக்கை சரி செய்ய வேண்டும்மின்சாரம்

திருப்பத்தூர் நகராட்சி 8-வது வார்டு ஜின்னாவீதி 3-வது தெரு மீலாது சவுகு ரவுண்டானா பகுதியில் கடந்தசில மாதங்களாக உயர்கோபுர மின்விளக்குகள் எரியவில்லை. அந்த மின்விளக்குகளை கீழே இறக்கி வைத்துள்ளனர். அதை பழுது நீக்கி உயரத்தில் பொருத்தி எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுல்தான்ஜியாவுதீன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 11:13 AM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#23275

சாலை பள்ளத்தை சரி செய்ய வேண்டும்

சாலை

போளூர்-செங்கம் நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. அந்தப் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். விபத்துகளும் நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் தார் போட்டு நிரப்பி சமன் செய்ய வேண்டும். -ராஜா, போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 11:03 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#23274

சாலை பணி தொடங்கப்படுமா?

சாலை பணி தொடங்கப்படுமா?சாலை

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி அருகே பாலாற்றுக்கு செல்லும் சாலையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகிறது. நேற்று இரவு அந்த வழியாக சென்ற கார் பணிகளுக்காக தோண்ட பட்ட பள்ளத்தில் சிக்கியது. காரை மீட்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடு பட்டனர். எனவே சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் விரைவில் தொடங்கி முடிப்பார்களா? -மோகன்குமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick