Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Jun 2025 6:37 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56604

வீணாக செல்லும் குடிநீர்

வீணாக செல்லும் குடிநீர்தண்ணீர்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சி.எம்.சி. காலனி மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் சாலையோரம் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாய்யை சரி செய்ய வேண்டும். -மணிவண்ணன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 8:25 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#56461

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

ஜமுனாமரத்தூர் தாலுகா ஆட்டியானூர் மெயின்ரோட்டில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கூடம் எதிரே சாலை உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மலையில் வேகமாக வருகின்றன. மாணவர்கள் நலன் கருதி சாலையின் குறுக்கே வேகத்தடை அமைத்துத் தருவார்களா? -ஆர்.பார்த்தீபன், கீழ்ஜீமரத்துர்.

மேலும்
ஆதரவு: 29
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 8:21 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#56460

குப்பை கழிவுகளை கொட்டும் அவலம்

குப்பை

வந்தவாசி தாலுகா அலுவலகம், தெற்கு போலீஸ் நிலையம் அருகில் அழுகிய காய்கறிகள், குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அங்கு வரும் பன்றிகள், மாடுகள் குப்பைகளை கிளறிவிட்டு கழிவுகளை சாப்பிடுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றத்தால் தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையத்துக்கு வருபவர்களுக்கும், அங்குப் பணியாற்றுவோருக்கும் சிரமமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும். -வங்கை அகிலன், சமூக ஆர்வலர், வங்காரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 8:17 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#56459

பஸ் பயணிகளுக்கு இருக்கை வசதி

மற்றவை

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை செல்லும் வழியில் பஸ் நிறுத்தம் உள்ளது. அந்தப் பஸ் நிறுத்தத்தில் சிமெண்டால் ஆன இருக்கை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆர்.முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 8:11 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#56457

மோசமான சாலை

மோசமான சாலைசாலை

திருவண்ணாமலை தாலுகா துரிஞ்சாபுரம் ஒன்றியம் மாதலம்பாடி கிராமத்தில் ஏரிக்கரையோரம் மதுரா கணேசபுரம்-கூத்தலவாடி செல்லும் தார் சாலை பழுதடைந்து, மிக மோசமான நிலையில் உள்ளது. அந்தச் சாலையில் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ செல்ல முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்க வேண்டும். -என்.சின்னத்துரை, மாதலம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 8:06 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56456

பயன்பாடற்ற குடிநீர் தொட்டி

பயன்பாடற்ற குடிநீர் தொட்டிதண்ணீர்

திருப்பத்தூர் அருகே உடையாமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பாலம்பட்டி ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு அருகில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 8:03 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56455

மோசமான சாலை

சாலை

திருப்பத்தூர்- தர்மபுரி சாலையில் இருந்து குனிச்சி ஊருக்குள் செல்லும் சாலையானது மோசமான நிலையில் உள்ளது. எனவே அந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிதுரை, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 8:01 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56454

சாய்ந்த மின்கம்பம்

சாய்ந்த மின்கம்பம்மின்சாரம்

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் ஊராட்சி ஜோன்றம்பள்ளி கிராமத்தில் எம்.ஜி.ஆர். நகரில் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தை நேராக நட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 7:58 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56453

சாலையோரம் குப்பைகள் வீச்சு

குப்பை

திருப்பத்தூர் அருகே ஆதியூரில் சாலையோரம் குப்பைகள் வீசப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 7:45 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#56452

ரேஷன் கடையை மாற்றி அமைக்க வேண்டும்

மற்றவை

ஜோலார்பேட்டை ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சி கொல்லங்குட்டை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள மக்கள் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். அந்த ரேஷன் கடையை மாற்ற எங்கள் கிராமத்திலேயே அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, சந்திரபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 7:42 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#56451

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

அரக்கோணம்-திருத்தணி மேம்பாலம் அருகே மங்கமாபேட்டை சாலையோரம் ஒரு மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. ஆகையால், பெரும் விபத்து ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுகுமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 7:38 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#56450

அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்

மற்றவை

வாலாஜா பஸ் நிலைய பகுதியையொட்டி உள்ள கங்கைகொண்டான் மண்டபம் தெரு, காந்தி சிலை சதுக்க தெருக்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி உள்ளனர். அந்த 2 தெருக்கள் வழியாக வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளன. இதுபற்றி புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இனியாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 2 தெருக்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா? -ஜெகநாதன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick