Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 March 2025 8:01 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#54485

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர்- புதுப்பேட்டை சாலையில் கழிவுநீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரவில்லை. இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவு நீர் கால்வாயை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணாலன், திருப்பத்தூா்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 7:59 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#54484

மின்கம்பிகள் மீது உரசும் மரக்கிளைகள்

மின்கம்பிகள் மீது உரசும் மரக்கிளைகள்மின்சாரம்

வாணியம்பாடி அருகில் வளையாம்பட்டு கிராமம் உள்ளது. அங்குள்ள அஞ்சலக தெருவில் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளன. மின் கம்பிகளுக்கு மேலே தென்னைமர ஓலைகள், மரக்கிளைகள் உரசியபடி காணப்படுகின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் கம்பிகள் மீது உரசும் தென்னை ஓலை, மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -எம்.வேல்முருகன், வளையாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 7:55 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#54483

மூடியே கிடக்கும் ஏ.டி.எம். மையம்

மூடியே கிடக்கும் ஏ.டி.எம். மையம்மற்றவை

கண்ணமங்கலம் கூட்ரோட்டில் அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.ஏம். மையம் உள்ளது. அது, கடந்த சில நாட்களாக இயங்காமல் மூடியே உள்ளது. அங்கு, பணம் எடுக்க முடியாமல் வெளியூர் சென்று எடுக்க வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த ஏ.டி.எம். மைய எந்திரத்தில் பணம் நிரப்பநடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிதுரை, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 7:54 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#54482

மின் கட்டண குறுஞ்செய்தி அனுப்பப்படுமா?

மின்சாரம்

மின் நுகர்வோர்கள் ஒவ்வொரு முறையும் மின் பயன்பாட்டுக்கான தொகையை மின்சார வாரிய அலுவலர்கள் அளவீடு எடுத்த சில நாட்களில் செலுத்துகிறார்கள். மின்பயன்பாட்டின் அளவீடுகள் மற்றும் அதற்கான மின்சார அளவீடு மற்றும் செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்டவைகளை செல்போனுக்கு குறுஞ்செய்தியாக மின்வாரியம் சார்பில் அனுப்ப வேண்டும், அது சார்ந்த தொழில்நுட்பத்தை அதிகாரிகள் முழுவதுமாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா? -சேகர், செங்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 7:51 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#54481

நச்சுப்புகையால் சுவாச பிரச்சினை

நச்சுப்புகையால் சுவாச பிரச்சினைகுப்பை

கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு கிராமத்தில் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஏரி பகுதியில் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகின்றனர். அந்தக் குப்பைகளுக்கு யாரோ தீ வைத்து விடுவதால் பற்றி எரிகிறது. அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் வாகன ஓட்டிகள், அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. ஏரி பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். -அருண்குமார், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 7:50 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#54480

செயல்படாத நீரேற்று நிலையம்

தண்ணீர்

கீழ்பென்னாத்தூரில் திரவுபதியம்மன் கோவில் தெருவில் ஒரு ரூபாய் செலுத்தினால் 5 லிட்டர் தண்ணீர் வரக்கூடிய தானியங்கி நீரேற்றும் நிலையம் உள்ளது. அந்த நீரேற்றும் நிலையம் தற்போது செயல்படாமல் உள்ளது. கோடைக்காலம் வர உள்ளதால், தண்ணீர் பயன்பாடு அதிகமாக இருக்கும். ஆகவே நீரேற்றும் நிலையம் செயல்பட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -டி.செல்வமணி, கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 7:48 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#54479

பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

ஆலங்காயம், ஜமுனாமரத்தூர் வழியாக ஆட்டியானூர் வரை அரசு டவுன் பஸ் இயக்கினால் ஜவ்வாதுமலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பயன் அடைவார்கள். தற்போது மினி பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்க உள்ளதால், இந்த ரூட்டில் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ம.ம.பழனி, ஜவ்வாதுமலை.

மேலும்
ஆதரவு: 9
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 7:43 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#54478

கிணறை மூட வேண்டும்

கிணறை மூட வேண்டும்தண்ணீர்

கலசபாக்கம் தாலுகா கீழ்பாலூர் கிராமத்தில் சிவன் கோவில் எதிரில் ஒரு பயனற்ற கிணறு உள்ளது. அந்தக் கிணறு பல ஆண்டுகளாக திறந்தே உள்ளது. அந்தக் கிணறு சுகாதார சீர்கேடாக உள்ளதுடன் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. பயன்பாடற்றக் கிணற்றை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அய்யப்பன், கீழ்பாலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 8:19 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#54320

புதர் மண்டிய சிறுவர் பூங்கா

பூங்கா

திருப்பத்தூர் அருகே உடையாமுத்தூர் பகுதியில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு உள்ள சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் புதர்மண்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே இதனை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -சின்னப்பா, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 28
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 8:18 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#54319

கால்வாய் தூர்வாரப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் அருகே குடியானகுப்பம் அங்கன்வாடி அருகே கழிவுநீர் தேங்கி புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அங்கன்வாடி மையம் அருகே கழிவுநீர் தேங்காதவாறு கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா? -கோவிந்தராஜன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 8:17 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#54318

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

ஜோலார்பேட்டை பஸ் நிலையம் அருகே சாலையோரம் அதிகமாக குப்பைகள் கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். சுகாதார சீர்கேடாக இருக்கும் அப்பகுதியில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அகஸ்டின், ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 8:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#54317

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் நகராட்சி 26-வது வார்டு கிருஷ்ணாபுரம் சாலை, எஸ்.கே.ரோடு பணக்காரத்தெரு, பி.எம்.எஸ். கொல்லை ஆகிய பகுதிகளில் மின் விளக்குகள் எரியவில்லை. இரவில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் மின் விளக்குகளை எரியவிட வேண்டும். -ரவிச்சந்திரன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick