Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Feb 2023 4:25 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#27164

குடிநீர் வினியோகம் செய்வார்களா?

தண்ணீர்

காவேரிப்பாக்கம் பேரூராட்சி வாசுகிநகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி செய்து தரவில்லை. குடிநீரை வெளிமார்க்கெட்டில் விலை கொடுத்து வாங்கி குடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் வாசுகி நகருக்கு குழாய் இணைப்பு வழங்கி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வார்களா?-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:16 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#27157

வாகன நிறுத்தும் இடமாக மாறிய கடைகள்

வாகன நிறுத்தும் இடமாக மாறிய கடைகள்மற்றவை

வேலூர் புதிய பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வந்து 7 மாதங்களாகியும் அங்குள்ள கடைகள் இதுவரை திறக்கப்படவில்லை. அதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பஸ்நிலையத்தில் டீ, காபி கடைகள், ஓட்டல்கள், ஏ.டி.எம். எந்திரங்கள், மருந்துக்கடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளும் இல்லை. எனவே பஸ்நிலையத்தில் உள்ள கடைகளை ஏலம் விட்டு விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடைகள் பயன்பாட்டில் இல்லாமல் திறந்த நிலையில் காணப்படுவதால் அவை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:09 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#27152

கழிவுநீர் கால்வாய் சேதம்

கழிவுநீர் கால்வாய் சேதம்கழிவுநீர்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பாண்டியன் வீதி 3-ல் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமாகி பல மாதங்கள் ஆகிறது. அங்குள்ள அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கழிவுநீரை மிதித்துக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சேதம் அடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். -ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 3:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#27143

மின் விளக்குகள் எரியுமா?

மின் விளக்குகள் எரியுமா?மின்சாரம்

வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. அங்கு இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் உயர் கோபுர விளக்குகள் ஒரு சில எரியாமல் கிடப்பதால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உயர் கோபுரத்தில் உள்ள எரியாத மின்விளக்குகளை சரி செய்து எரிய விட வேண்டும்.-மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 3:41 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#27141

குடிநீர் வினியோகிப்பார்களா?

குடிநீர் வினியோகிப்பார்களா?தண்ணீர்

குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. அந்த மையத்தில் உள்ள மோட்டார் அடிக்கடி பழுதாகி மூடப்பட்டு விடுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துபோகும் அந்த இடத்தில் குடிநீர் தேடி வருவோர் ஏமாற்றம் அடைகின்றனர். இனி வரும், கோடைக்காலத்தை மனதில் கொண்டு, இந்த மையத்தைச் சீரமைத்து, தினமும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிப்பார்களா?-சடைவேந்தன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 3:39 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#27140

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளியில் இருந்து பாலாற்றுக்கு செல்லும் வழியில் இரட்டை மின்கம்பம் உள்ளது. அதன் அடிபாகம் சேதம் அடைந்து சிமெண்டு பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளிேய தெரிகிறது. சேதம் அடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-விமல், சத்துவாச்சாரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 3:36 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#27139

ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

மற்றவை

ஆரணி நகரில் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்பேரில் ஆரணி கோட்டை மைதானம் சுற்றிலும் 4 புறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் அதில் ஒவ்வொரு பக்கமும் ஒரு சிலர் ஆக்கிரமிப்புகளை செய்து தொடர்ந்து கடைகளை திறக்காமல் பெட்டிகளை வைத்துள்ளனர். அதையும் எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர், ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக சமூக அலுவலர் குற்றம் சாட்டினர். -ராகவன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 3:34 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#27137

சாலை அகலப்படுத்தும் பணி விரைவுபடுத்தப்படுமா?

சாலை அகலப்படுத்தும் பணி விரைவுபடுத்தப்படுமா?சாலை

கண்ணமங்கலம்-படவேடு செல்லும் சாலையில் குப்பம் கிராமப் பகுதியில் ஏற்கனவே சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்து விட்டது. தற்போது குப்பம் கிராமத்தில் இருந்து காளசமுத்திரம் கிராமம் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. சாலை குறுகலாக உள்ள நிலையில் இவ்வழியே தனியார், அரசு பஸ்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.-கார்த்திகேயன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 3:31 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#27136

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் திருவள்ளுவர் தெருவுக்கு செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டி உள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.-ஜாகீர்கான், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 3:26 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#27134

பயன்படுத்தப்படாத அடிபம்பு

பயன்படுத்தப்படாத அடிபம்புதண்ணீர்

கண்ணமங்கலம் பேரூராட்சி வாணக்காரத்தெரு, புதிய சாலை பகுதியில் குளத்துமேட்டு தெரு தொடங்கும் இடங்களில் ஆழ்துளை கிணறு அடிபம்புகள் உள்ளன. வாணக்காரத்தெருவில் யாரும் அந்த அடிபம்பை பயன்படுத்தவில்லை. இதேபோல் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் குளத்துமேட்டு தெரு தொடங்கும் இடத்தில் உள்ள ஆழ்துளை கிணறு அடிபம்பும் செயல்படாததால் மேலே தகர ஷீட்டு மூலம் மூடப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறு அடிபம்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குமரன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 5:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#26993

திறந்த நிலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் நகராட்சி கட்டண கழிப்பிடம் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் திறந்த நிலையில் உள்ள கால்வாயில் செல்கிறது. சில நேரங்களில் அந்தக் கால்வாய் நிரம்பி சாலையில் செல்கிறது. கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் துர்நாற்றத்துடன் செல்கிறது. இதனால் பொதுமக்களும், பஸ் பயணிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் அவதிப்படுகின்றனர் எனவே திறந்த நிலையில் ஓடும் கழிவுநீரை தடுக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#26991

சாலைகளை சீரமைக்க வேண்டும்

சாலை

திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டு செல்ல புதிய தார் சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக போடப்பட்ட தார் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் உடனடியாக தார் சாலையை சீரமைத்துத்தர வேண்டும்.-பிரேம்குமார்,நகராட்சி கவுன்சிலர். திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick