Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Feb 2023 4:54 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#27367

கழிவுநீர் தேங்கும் அவலம்

கழிவுநீர் தேங்கும் அவலம்கழிவுநீர்

கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூர் ஊராட்சி ரெட்டிபாளையம் கிராமத்தில் ரோட்டுத்தெரு பகுதியில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதி தூரம் நடந்துள்ளது. தற்போது புதிதாகக் கட்டப்பட்ட கால்வாய் வழியாகக் கழிவுநீர் வெளியேறவில்லை. அங்கு தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-முனுசாமி, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 4:52 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#27366

கூடுதல் கவுண்ட்டர் அமைக்க வேண்டும்

கூடுதல் கவுண்ட்டர் அமைக்க வேண்டும்மின்சாரம்

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் பெரும்பாலான பகுதிகள் காலி இடமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் முள் செடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு விஷ பூச்சிகள் அதிகளவில் உலாவி வருகின்றன. மேலும் மின் கட்டணம் செலுத்த மின்வாரிய அலுவலகத்துக்கு வந்தால் அங்கு ஒரே ஒரு கவுண்ட்டரில் மக்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே மின்வாரிய அலுவலகத்தில் கூடுதல் கவுண்ட்டர்கள் அமைக்க வேண்டும்.-வெங்கடாசலம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 4:50 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#27365

சாலையோரம் தேங்கும் கழிவுநீர்

சாலையோரம் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

ஆரணி கார்த்திகேயன் சாலையில் உள்ள பார்வதியம்மன் கோவில் முன்பு கழிவுநீர் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களும் சிரமப்படுகின்றனர். ஆரணி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கும் கழிவுநீரை வடிய வைக்க வேண்டும்.-நடராஜன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 4:46 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#27364

படிக்கட்டுகளை சரி செய்வார்களா?

படிக்கட்டுகளை சரி செய்வார்களா?சாலை

போளூரில் பிரசித்தி பெற்ற நரசிம்மபெருமாள் கோவில் உள்ளது. சுமார் 900 படிகள் கொண்ட மலை மீதுள்ள நரசிம்மபெருமாள் சுயம்புவாக தோன்றியவர். பக்தர்கள் சாமியை வழிபட மலைக்கு செல்ல படிகளை தான் பயன்படுத்த வேண்டும். படிகள் சேதமடைந்து உள்ளது. படிகளின் இரு பக்கமும் முள்செடிகளும், புதர்களும் வளர்ந்துள்ளன. பக்தர்கள் மலைக்கு செல்லும்போது விஷ பூச்சிகள் படிக்கட்டுகளில் நடமாடுகின்றன. இதனால் பக்தர்கள் அச்சப்படுகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை படிக்கட்டுகளை சரி செய்ய வேண்டும்.-அரசு, போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#27197

தற்காலிக சிக்னல்கள் அமைப்பார்களா?

மற்றவை

வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை செல்லும் நான்கு வழி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு விட்டது. திருப்பத்தூர் நகரில் டவுன் போலீஸ் நிலையம் அருகே கிருஷ்ணகிரிக்கு செல்லும் ரோடு, கோர்ட்டுக்கு செல்லும்ரோடு, நகைக்கடை பஜாருக்கு செல்லும் ரோடு, வாணியம்பாடிக்கு செல்லும் ரோடு என 4 ரோடுகள் சந்திக்கின்றன. அந்தப் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் வந்து திரும்பும்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. போக்குவரத்து போலீசார் சில நேரங்களில் மட்டுமே அங்கு நிற்கின்றனர். மற்ற...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#27195

பன்றிகள் தொல்லை

மற்றவை

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் உள்ள தில்லைநகர் பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. சாக்கடையில் சுற்றித்தெரியும் பன்றிகள் சில நேரங்களில் மக்கள் குடியிருப்புகளுக்கும் வந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. 50-க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே தில்லைநகர் பகுதியில் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ், தில்லைநகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:45 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#27186

ஓரங்கட்டப்பட்ட வழிகாட்டும் பெயர் பலகை

ஓரங்கட்டப்பட்ட வழிகாட்டும் பெயர் பலகைமற்றவை

வாணியம்பாடியில் இருந்து பல்வேறு ஊருக்கு செல்ல வழி காட்டும் பெயர் பலகை தேசிய நெடுஞ்சாலைத்துறையால் புதிய சாலை அமைக்கும்போது அகற்றி நகராட்சி அலுவலக வளாகத்தில் போடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் பாதிப்பு அடைகின்றனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழிகாட்டி பலகையை எடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.-தங்கமணி, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:43 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#27182

பகலில் எரியும் மின் விளக்குகள்

மின்சாரம்

ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் தெருவில் எல்.இ.டி மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#27179

கரடு முரடான சாலை

கரடு முரடான சாலைசாலை

கந்திலி ஒன்றியத்தில் ஆவல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊராட்சி திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள எர்ராம்பட்டி முதல் காவேரிப்பட்டினம் ரோடு வரை இணைக்கும் சாலையும், சொளச்சூர் முதல் ஜி.டி.குப்பம் வரை உள்ள 2 சாலைகளும் மிகவும் மோசமாகவும், குண்டும், குழியுமாகவும் கரடு முரடாக காட்சி அளிக்கிறது. அந்த சாலைகளில் சைக்கிள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மேற்கூறிய 2 சாலைகளையும் உடனடியாக தார்சாலை அமைத்துத் தர புதிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:39 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#27176

வாரச்சந்தையில் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டையில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று வாரச்சந்தை நடக்கிறது. அன்று அப்பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ளது. மேலும் வாகனப் போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. அதை சரி செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வியாபாரிகள், அன்வர்திகான்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:36 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#27174

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

அரக்கோணம் சுவால்பேட்டை பஸ் நிறுத்தம் முதல் திருத்தணி ரோடு ஜோதி நகர் வரை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொது மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவமனை, இதர பணிகளுக்காக வருபவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அந்தப் பகுதியை கடந்து செல்ல மாணவர்களும், முதியோர்களும் சிரமப்படுகின்றனர். எனவே நகர பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 4:29 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#27165

அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் தேவை

அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் தேவைமற்றவை

சோளிங்கரை அடுத்த கொண்டபாளையம் யோக நரசிம்மர் கோவில் மலையடிவாரம் அருகே 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்துள்ளது. இதனால் தற்போது 3 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மையத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-நரசிம்மன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick