Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Jun 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#34513

குப்பைக்கூளங்கள் அகற்றப்படுமா?

குப்பை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் வாசல் படி முன்பு குப்பைக்கூளங்களை குவித்து வைத்துள்ளனர். அதை அகற்ற பள்ளி நிர்வாகம் முன்வர வேண்டும்.-முகம்மது நசீர், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#34510

விவசாய நிலத்தில் புகும் கழிவுநீர்

விவசாய நிலத்தில் புகும் கழிவுநீர்கழிவுநீர்

கலவை பேரூராட்சி பஜார் வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் தெருவில் உள்ள பல கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் சுப்பிரமணியர் கோவில் அருகே ஒன்றாகக் கலக்கின்றன. அந்தக் கால்வாய் விவசாய நிலத்தின் அருகே உள்ளது. அதில் ஓடும் கழிவுநீர் மழைக்காலத்தில் அருகில் உள்ள விவசாய விளை நிலத்தில் பாய்கிறது. இதனால் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள், துணிகள் விளை நிலத்தில் புகுந்து பயிரை வளர விடாமல் நாசமாக்குகின்றன. கால்வாயை தூர்வாரி கழிவுநீரை முைறயாக வடிய வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பல முறை புகார்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#34506

மேம்பாலத்தில் குப்பைகள் அகற்றப்படுமா?

மேம்பாலத்தில் குப்பைகள் அகற்றப்படுமா?குப்பை

அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள மங்கம்மாபேட்டை மேம்பாலத்தின் இரு பக்கமும் கோடை வெயிலிலும் பசுமையாக புல், செடிகள் வளர்ந்துள்ளது. மேலும் மணல் குவியலும், குப்பைகளும் உள்ளது. இதனால் பஸ்கள், லாரிகள், கார்கள் செல்லும்போது காற்றில் மண், துகள் பறந்து மோட்டார் சைக்கிள், சைக்கிள்களில் செல்வோரின் கண்களில் விழுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விபத்துகள் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலங்களில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சீனிவாசன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#34505

ஆபத்தான மின்கம்பங்கள்

ஆபத்தான மின்கம்பங்கள்மின்சாரம்

அரக்கோணம்-வடமாம்பாக்கம் செல்லும் ரோட்டில் திருத்தணி ரோடு மேம்பாலம் அருகே மின் கம்பம் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. அதே போல் நாகாலம்மன் நகர் பகுதியில் திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள பாலாஜிநகர் முகப்பு பகுதியில் ஒரு மின் கம்பம் மழை, காற்று வீசினால் திடீரென கீழே சாய்ந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பங்களை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-லோகேஷ், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 4:49 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#34500

அடிப்படை வசதிகள் தேவை

மற்றவை

வாலாஜாைவ அடுத்த மருதாலம் பகுதியில் முைறயான சாலை, குடிநீர், தெரு மின் விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் கிராமக் குளக்கரை அருகில் காரிய மேடை வசதி செய்து கொடுக்க வேண்டும். பஸ் நிறுத்தம் மற்றும் மேல்நிலைப்பள்ளி எதிரே, ஜம்புகுளம் கூட்ரோடு அருகே சாலையின் குறுக்ேக வேகத்தடை அமைக்க வேண்டும்.-செல்வேந்திரன், மருதாலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 4:31 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#34492

பாலாற்றில் மேம்பாலம் கட்ட வேண்டும்

சாலை

வாலாஜா தாலுகா பூட்டுத்தாக்கு, அம்முண்டி, திருவலம் செல்லும் சாலையில் பூட்டுத்தாக்கு-அம்முண்டி இடையே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. அங்கு 300 மீட்டர் நீளத்துக்கு பாலாற்றில் மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும். மழைக்காலங்களில் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, பாலாற்றைக் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பூட்டுத்தாக்கு-அம்முண்டி இடையே பாலாற்றில் மேம்பாலம் கட்ட வேண்டும்.-டி.சிவலிங்கம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#34329

சுடுகாடு ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

சாலை

வாலாஜாவை அடுத்த நீலகண்டராயன் பேட்டை கிராமத்தில் உள்ள சுடுகாட்டை சிலர் ஆக்கிரமிப்பு செய்து நிலமாக பயன்படுத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?-பிரபாகரன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 5:25 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#34328

பொது சுகாதார நிலையம் தேவை

மற்றவை

வாலாஜாவை அடுத்த மருதாலம் ஊராட்சிக்கு உட்பட்ட நீலகண்டராயன் பேட்டை கிராமத்தில் பொது சுகாதார நிலையம் இல்லை. வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டால் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரடிகுப்பம் கிராம சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. மாவட்ட நிர்வாகம் நீலகண்டராயன்பேட்டையில் பொது சுகாதார நிலையம் அமைக்குமா?-பெரியசாமி, மருதாலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 5:23 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#34326

தரை கிணறை மூடுவார்களா?

தரை கிணறை மூடுவார்களா?தண்ணீர்

பாணாவரம் சந்தைமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி அருகே நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத தரைக்கிணறு உள்ளது. பள்ளி குழந்தைகள் அருகில் உள்ள தரைக்கிணறு பகுதியில் விளையாடுகின்றனர். விளையாடும்போது தவறுதலாக கிணற்றில் விழுந்தால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தரைக்கிணறை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன்ராஜ், பாணாவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#34325

குடிநீர் தொட்டி சேதம்

தண்ணீர்

கலவையை அடுத்த அகரம் கிராமத்தில் உள்ள ஒத்தவாடை வீதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் உள்ளன. அந்தத் தொட்டி எப்போது விழும் எனத் தெரியவில்லை. இதுகுறித்து திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை தெரிவிக்கப்பட்டது. சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்.-கணேசன், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#34324

குடிநீர் வழங்கப்படுமா?

தண்ணீர்

திருப்பத்தூர் அருகே அச்சமங்கலம் ஊராட்சி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை எனக்கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஓரிரு வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. மற்ற வீடுகளுக்கு சரிவர குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 5:15 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#34323

சாலை வசதி தேவை

சாலை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் காலனியில் 100 குடும்பங்கள் உள்ளன. அந்த கிராமத்துக்கு சாலை வசதி இல்லை. அதேபோல் இறந்தவர்களின் உடல்களை மயானத்துக்கு எடுத்துச்செல்ல சாலை வசதி இல்லை. கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.-கே.மூர்த்தி, செவாத்தூர் புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick