Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Jun 2023 5:59 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#34570

ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி

ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டிதண்ணீர்

ஜோலார்பேட்டைைய அடுத்த புதுப்பேட்டை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி பழுதடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் முன்பே, அதை உடனடியாக சீர் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.-ர.சந்தோஷ்அரி, ஆத்துமேடு, புதுப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:57 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#34564

தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து

தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துபோக்குவரத்து

வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் ரோட்டில் உள்ள மேம்பாலம் பகுதியில் ஓசூர் செல்லும் சாலையிலும், வேலூர் செல்லும் சாலையிலும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்துப் பாதிப்பு மற்றும் விபத்துகள் நடக்கின்றன. வாணியம்பாடியில் போக்குவரத்துப் போலீசார் இருந்தும், அதைக் கண்டும் காணாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆ.பார்த்திபன், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:53 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#34559

சாலை பழுது

சாலை

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரில் உள்ள தார் சாலை பழுதடைந்துள்ளது. பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் அந்த வழியாக வாகனங்கள் திரும்பும்போது எதிரே வரும் வாகனங்கள் மோதிக்கொள்ளும் அபாயம் உள்ளது. மேலும் பெரிய கடை தெரு வழியில் இருந்து வரும் வாகனங்கள் மோதி கொள்ளும் அச்சம் உள்ளது. எனவே அந்த இடத்தை அகலப்படுத்தி உடனடியாக ரவுண்டனா அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:52 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#34557

பள்ளியில் சமூக விரோத செயல்கள்

மற்றவை

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. இதனால் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறிவிட்டது. இரவில் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு காலிப்பாட்டில்களை அங்கேேய உடைக்கின்றனர். பள்ளிக்குள் விரும்ப தகாத செயல்களும் நடக்கிறது. இதனால் பள்ளிக்கு உடனடியாக சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும். துத்திப்பட்டு பகுதியில் தலைதூக்கும் சாராய விற்பனையை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:31 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#34552

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்போக்குவரத்து

கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் பகுதியில், நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பள்ளி செல்லவும், வீடு திரும்பவும் பஸ்சுக்காகக் காத்திருக்கிறார்கள். போதிய பஸ் இயக்காததால் அங்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு, உடனடியாக தீர்வு காண, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.-பா.கிருஷ்ணன், வடுகந்தாங்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:28 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34548

கால்வாயை தூர்வாருவார்களா?

கால்வாயை தூர்வாருவார்களா?கழிவுநீர்

வேலூர்-ஆற்காடு சாலையில் விநாயகர் கோவில் அருகில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் குப்பைகளும், செடிகளும் வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. கால்வாயை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34545

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவிலில் இருந்து காகிதப் பட்டறை செல்லும் ஆற்காடு சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சுப்பிரமணியம், காகிதப்பட்டறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34540

சேதம் அடைந்த சிமெண்டு சிலாப்

சேதம் அடைந்த சிமெண்டு சிலாப்சாலை

வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் பாதையில், கால்வாய் மீது அமைக்கப்பட்டு உள்ள சிமெண்டு சிலாப் உடைந்து கம்பிகள் வெளிேய நீண்டு கொண்டு உள்ளன. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. உடைந்த பகுதியில் சிமெண்டு பூசி சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-கண்ணன், தோட்டப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#34534

பயணிகள் நிழற்குடை கட்டுவார்களா?

மற்றவை

பேரணாம்பட்டு புத்துக்கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் குடியாத்தம், ஆம்பூர், வேலூர், வீ.கோட்டா ஆகிய ஊர்களுக்கு பயணிகள் சென்று வருகின்றனர். புத்துக்கோவில் பகுதியில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்குடை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#34530

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

செங்கம் பேரூராட்சியில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மில்லத் நகர், போளூர் சாலை, தளவாநாயக்கன்பேட்டை, மேலப்பாளையம், ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. அந்தப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிகின்றன. பேரூராட்சி நிர்வாகம் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.-சிவச்சந்திரன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#34529

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்போக்குவரத்து

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோட்டில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்த நிலையில் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். அதிலும், ெபண்களை தங்கள் அருகிலேயே அமர வைத்துக் கொண்டு டிரைவர்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள். இது, பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கிறது. மேலும் இது ஆபத்தான பயணமும் கூட. ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றுவதைப் போக்குவரத்துத்துறையினரும், போலீசாரும் கண்டு கொள்வதே இல்லை. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ஜாகீர், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:06 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#34525

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

செய்யாறு பகுதி பஸ் நிலையம் முதல் ஹவுசிங் போர்டு வரை சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜா, செய்யாறு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick