Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 July 2023 1:20 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#36076

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?போக்குவரத்து

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகில் உள்ள பாளைய ஏகாம்பர நல்லூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் உள்ளனர். அவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல கூடுதலாக பஸ் வசதி இல்லை. படிகளில் ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு பயணம் செய்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நலன் கருதி பாளை ஏகாம்பர நல்லூர் கிராமத்துக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.-ராகுல், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 1:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#36073

குடிநீர் குழாய் வால்வு பழுது

குடிநீர் குழாய் வால்வு பழுதுதண்ணீர்

ஆரணி அருணகிரிசத்திரம் காண்ட்ராக்டர் பொன்னுசாமி தெரு முகப்பில் நகராட்சி குழாய் தண்ணீர் திருப்பும் வால்வில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு முறையும் நகராட்சி சார்பில் குடிதண்ணீர் வினியோகிக்கும் போது வால்வின் வழியாக அதிக அளவில் தண்ணீர் வெளியேறி கால்வாயில் செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் வால்வு சரி செய்யப்படுமா?-ராஜுசுந்தரம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 6:16 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#35989

ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஆக்கிரமித்துக் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது, விபத்துகளும் நடக்கின்றன. நெடுஞ்சாலைத்துறையினரும், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஹரீஸ், பூட்டுத்தாக்கு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:37 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#35988

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிமின்சாரம்

நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14-வது வார்டில் தம்மா தெருவில் மாநில நெடுஞ்சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக 10 அடி உயரத்தில் இருந்தன. அந்த வழியாக செல்லும் பள்ளி பஸ் மற்றும் அரசு பஸ்கள் பல நேரங்களில் மின் கம்பிகள் மீது உரசின. அசம்பாவிதம் தவிர்க்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அந்தச் செய்தி எதிரொலியாக மின் வாரியத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தாழ்வாக தொங்கிய மின் கம்பிகளை மேலே உயர்த்தி கட்டி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:35 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#35987

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் டவுன் கம்பிக்கொல்லை தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.-ராஜு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:33 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#35986

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

திருப்பத்தூர்-சேலம் மெயின் ரோட்டில் எஸ்.ஏ.எஸ். நகர், அன்பு நகர் ஆகிய பகுதிகளில் மெயின் ரோட்டையொட்டி கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கல்வாய் தூர்ந்து போய் உள்ளது. இதனால் கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.அன்பு, முன்னாள் நகராட்சி கவுன்சிலர்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 5:29 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#35985

கழிவுநீர் தேங்கும் அவலம்

கழிவுநீர்

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிவறை உள்ளது. அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் திறந்தவெளியில் உள்ள கால்வாயில் செல்கிறது. மேலும் கால்வாய் அடைப்பால் கழிவுநீர் செல்லாமல் அங்கேயே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த இடத்தில் துர்நாற்றம் வீசுகிறது. பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், கால்வாயை மூடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 1:17 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#35888

பயனற்ற நிலையில் ஆழ்துளை கிணறு

பயனற்ற நிலையில் ஆழ்துளை கிணறுதண்ணீர்

அரக்கோணம் சுவால்பேட்டை மேற்கு ஒப்பணக்காரத் தெரு திருத்தணி ரோடு சந்திப்பு அருகே பொது மக்கள் பயன்படுத்தி வந்த கைப்பம்பு பழுதாகி பல மாதங்களாக சரி செய்யப்படாமலே உள்ளது. கைப்பம்பை சரி செய்ய கழற்றி சென்றனர். ஆனால் இன்னும் அதை ஆழ்துளை கிணறுடன் பொருத்தவில்லை. அந்த ஆழ்துளை கிணறு பயனற்ற நிலையில் உள்ளது. கைப்பம்பை ஆழ்துளை கிணறுடன் பொருத்துவார்களா?-சிவராஜ் அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 12:56 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#35876

டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவார்களா?

மற்றவை

அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்களால் பஸ் நிலையத்தில் இருந்து அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள், பொதுமக்களும், ரெயில் நிலையத்துக்கு செல்பவர்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அந்த இடத்தை கடந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-குமார், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 12:52 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#35875

மாட்டு தொழுவமாக மாறிய சமுதாயக்கூடம்

மாட்டு தொழுவமாக மாறிய சமுதாயக்கூடம்மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது கண்டியாங்குப்பம் கிராமம். இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ரூ.15 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை அதை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அப்பகுதி முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. மாடுகள் கட்டும் தொழுவமாக மாறி வருகிறது. ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு சுப விசேஷங்களுக்கு கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவா, கண்டியாங்குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 6:08 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#35873

பழம், காய்கறி கழிவுகள் சாலையோரம் வீச்சு

பழம், காய்கறி கழிவுகள் சாலையோரம் வீச்சுகுப்பை

செங்கம் பேரூராட்சியில் காய்கறி, பழங்கள் விற்பனை கடைகள் உள்ளன. அத்துடன் நடமாடும் பழக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளன. செங்கம்-போளூர் தேசிய நெடுஞ்சாலையில் மில்லத் நகர் முதல் தொடங்கி குயிலம் கூட்ரோடு, நீதிமன்றம் செல்லும் ரோடு, போளூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் கெட்டுப்போன காய்கறிகள், பழ வகைகளை சாலையின் இரு பக்கமும் வியாபாரிகள் வீசுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-அஜித், ெசங்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2023 6:10 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#35872

குடிபோதையில் மோட்டார்சைக்கிள் ஓட்டுவோர் மீது நடவடிக்கை

மற்றவை

செங்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்கு மதுபானத்தை வாங்கி குடித்து விட்டு போதையில் மோட்டார்சைக்கிள்களில் செங்கம் பேரூராட்சி, மேல்செங்கம், இறையூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வருவோர் அந்த வழியாக எதிரே வருவோர் மீது மோதி விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள். போலீசார் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு முறையான ஆவணம், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், குடிபோதையிலும் மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்து விபத்துகளை தடுக்க வேண்டும்.-சுபாஷ்சந்திரன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick