Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 July 2023 6:35 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#36217

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

பேரணாம்பட்டு வீ.கோட்டா ரோடு சந்திப்பு அம்பேத்கர் சவுக்கு பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்கள் ஆகிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 6:02 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#36215

கால்வாயை தூர் வார வேண்டும்

கால்வாயை தூர் வார வேண்டும்கழிவுநீர்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு.வி.க. நகர் பாண்டியன் வீதி 3-ல் முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள கட்டுக்கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. ஏராளமான குப்பைகள் கிடக்கின்றன. கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. எனவே செடி, கொடிகளை அகற்றி கால்வாயை தூர்வார வேண்டும்.-மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 5:56 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36212

நாய்கள் தொல்லை

மற்றவை

வேலூர் கொசப்பேட்டை பகுதியில் பல்வேறு தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. வாகன ஓட்டிகளை துரத்துகின்றன. பயத்தால் விபத்து ஏற்படுகிறது. பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகள் அச்சப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடிக்க வேண்டும். -எஸ்.ஜோதி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 5:53 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#36211

மைல் கல்லில் துண்டு பிரசுரம்

மைல் கல்லில் துண்டு பிரசுரம்மற்றவை

வாலாஜா-சோளிங்கர் ரோடு, திருத்தணி ரோடுகளில் மைல்கற்கள் உள்ளன. அதில் ஊர்களுக்கு செல்லும் கிலோ மீ்ட்டர் தூர விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சிலர் துண்டு பிரசுரங்களை ஒட்டி வைத்துள்ளனர். இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். மைல் கற்கள், அறிவிப்பு பலகைகளில் பொதுமக்கள் துண்டு பிரசுரங்கள் ஒட்டுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.-ரஞ்ஜித், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 5:52 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#36210

வேகத்தடை அமைக்கப்படுமா?

வேகத்தடை அமைக்கப்படுமா?சாலை

ஆற்காட்டில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்றாக திகழ்வது வேலூர் மெயின் ரோடு. இப்பகுதியில் இருந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-க்கு செல்ல வேண்டும் என்பதால் இந்தப் பகுதியில் கனரக, நான்கு, இரு சக்கர வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. சாலை திருப்பத்தில் அதிக எடையோடு லாரிகள் திரும்புவதால் அடிக்கடி சாலை பழுதாகிறது. விபத்துகளும் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க இப்பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்கப்படுமா?-சக்கரபாணி, ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 5:50 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#36209

சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

சாலை

வாலாஜாபேட்டை பஜாரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள அணைக்கட்டு சாலையோரம் அதிகளவில் கடைகளின் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற முன்வர வேண்டும். -சுகந்தன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 6:44 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#36197

கனரக வாகனங்களால் விபத்து

கனரக வாகனங்களால் விபத்துபோக்குவரத்து

நாட்டறம்பள்ளி ஊருக்குள் அரசு பஸ்கள் வருவதில்லை. அனைத்துப் பஸ்களும் பைபாஸ் சாலையிலேயே சென்று விடுகின்றன. நாட்டறம்பள்ளி ஊருக்குள் பஸ்கள் வந்து செல்ல கடந்தசில நாட்களுக்கு முன் போதிய வசதிகளுடன் சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலையில் கனரக வாகனங்களும், இறக்கை ஏற்றி செல்லும் வாகனங்களும் 10 முதல் 15 மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பஸ்கள் நாட்டறம்பள்ளி ஊருக்குள் செல்லாமல் மீண்டும் பைபாஸ் சாலையிலே செல்கின்றன. அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. இதுகுறித்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 6:45 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#36193

சாலையில் குவிந்து கிடக்கும் ஜல்லிக்கற்கள்

சாலையில் குவிந்து கிடக்கும் ஜல்லிக்கற்கள்சாலை

ஏலகிரிமலையில் கோடை விழா இந்த ஆண்டு நடப்பதாக இருந்த நிலையில் படகு சவாரி இல்லம், பூங்காவில் புதிய சாலைகள் அமைக்கும் பணி நடந்தது. திடீெரன கோடை விழா இந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் ஏலகிரிமலையில் படகு சவாரி இல்லத்தில் புதிய சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. படகு சவாரி இல்லத்தில் குவிக்கப்பட்ட ஜல்லிக்கற்கள் அப்படியே உள்ளது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து படகு சவாரி இல்லத்தில் சாலையில் உள்ள ஜல்லிக்கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 6:45 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#36191

நிறுத்தப்பட்ட சாலை பணி

நிறுத்தப்பட்ட சாலை பணிசாலை

நாட்டறம்பள்ளியில் இருந்து திருப்பத்தூர், ஜோலார்பேட்டைைய நோக்கி செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்துக்கு கீழே செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் போடப்பட்டு சாலை பணியை மேற்கொள்ளாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பள்ளி மாணவ-மாணவிகளும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.-இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 6:46 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#36190

பெயர் பலகையை அப்புறப்படுத்த வேண்டும்

பெயர் பலகையை அப்புறப்படுத்த வேண்டும்மற்றவை

திருப்பத்தூர் புதிய மாவட்டம் தொடங்கியபோது திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோட்டில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இயங்கி வந்தது. தற்போது திருவண்ணாமலை மெயின் ரோட்டில் புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கட்டப்பட்டு மாற்றப்பட்டு விட்டது. பழைய அலுவலகத்தில் வணிக வரித்துறை இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்தின் மேலே பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பெயர் பலகை அப்படியே உள்ளது. இதை அப்புறப்படுத்தாததால் பொதுமக்கள் தினமும் புதுப்பேட்டை ரோடு வணிகவரி அலுவலகத்துக்கு வந்து திரும்பி செல்கிறார்கள். உடனடியாக போலீஸ்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 5:34 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#36187

சாலைகளை சீரமைப்பார்களா?

சாலை

ஆம்பூர் ஏ.கஸ்பா 2-வது மற்றும் 3-வது செங்குந்தர் தெருவில் சாலை மிகவும் மோசமாக சேறும் சகதியுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்குமா?-பாபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 1:25 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#36080

நான்கு ரோடு சந்திப்பில் பள்ளங்கள்

நான்கு ரோடு சந்திப்பில் பள்ளங்கள்சாலை

வந்தவாசி பஜார் வீதியில் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளன. இருசக்கர வாகனங்களில் வருவோர் பள்ளங்களில் விழுந்து அடிபட்டு எழுந்து செல்லும் அவலம் நடக்கிறது. ஒருசில நேரத்தில் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெயக்குமார், சமூக ஆர்வலர், விழுதுப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick