Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Aug 2025 5:37 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#58242

பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் அகற்றம்

பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் அகற்றம்மற்றவை

திமிரி-ஆரணி நெடுஞ்சாலையில் வளையாத்தூர் கூட்ரோடு அருகே சாலையோரம் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பெயர் பலகையை அருகில் உள்ள மரக்கிளை மறைத்திருந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி எதிரொலியால், சாலையோரம் பெயர் பலகையை மறைத்திருந்த மரக்கிளையை நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர். -ஏகாம்பரம், வளையாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:30 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#58241

உப்பு குளத்தை சீரமைப்பார்களா?

மற்றவை

அரக்கோணம் பஜார் பகுதியில் உள்ள பழமையான பிரசித்தி பெற்ற உப்பு குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவுடன் குளத்தை தூர் வாரி புதுப்பித்தனர். தற்போது குளத்தில் உள்ள பூங்கா இருக்கும் இடமே தெரியாத வகையில் பாழடைந்தும் செடி, கொடிகள் வளர்ந்தும், குப்பைகள் தேங்கியும் மாசடைந்தும் உள்ளது. இதனால், அப்பகுதியில் நோய் பரவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, அந்தக் குளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -லோகநாதன், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:27 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#58240

இலவச கழிவறை வசதி தேவை

மற்றவை

வாலாஜா பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு அவசரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள இலவச கழிவறை வசதி இல்லை. உடனடியாக ஆண், பெண் இருபாலருக்கும் இலவச கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்துசாமி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:26 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#58239

புதிய சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?

புதிய சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?சாலை

அரக்கோணம் பஜார் தெருவில் உள்ள சிமெண்டு பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் முதியவர்கள், மாணவர்கள், நடந்து செல்லும்போது தவறி கீழே விழுகின்றனர். மோட்டார்சைக்கிளில் செல்பவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்வதே இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய சிமெண்டு சாலையை அகற்றி விட்டு புதிய சிமெண்டு சாலை அமைத்துத்தர வேண்டும். -ராம்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:22 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#58238

மலைப்பாதையை விரிவுபடுத்த வேண்டும்

சாலை

வாலாஜா தாலுகா முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லாலாப்பேட்டை பகுதியில் காஞ்சனகிரி மலையில் ஓசை எழுப்பும் வெள்ளைக்கல் பாறை உள்ளது. அந்த ெவள்ளைக்கல் பாறையை பார்க்க தினமும் பலர் 2, 4 சக்கர வாகனங்களில் வருகின்றனர். அதில் கல்மேல்குப்பம் வழியாக மலைக்கு செல்லும் பாதை குறுகலாக உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே அந்த மலைப்பாதையை விரிவுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -உமாபதி, லாலாப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:20 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#58234

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

மற்றவை

கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் இந்து ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கட்டிடம் புதிதாக ஆரணி சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. ஆனால் சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. பள்ளி முன்பு வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது. எனவே இப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் நலன் கருதி உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். -கோவிந்தராஜ், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:17 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#58230

மாடுகள் கட்டும் இடமாக மாறிய வாரச்சந்தை

மாடுகள் கட்டும் இடமாக மாறிய வாரச்சந்தைமற்றவை

வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தில் தேசூர் செல்லும் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் பணம் செலவழித்து கட்டப்பட்ட வாரச்சந்தை தற்போது மாடு கட்டும் தொழுவமாக மாறி விட்டது. பெரிய அளவில் நடந்த வாரச்சந்தை தற்போது நடக்கவில்லை. அதிகாரிகள் வாரச்சந்தை கட்டிடத்தை சீரமைத்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கேட்டுக்கொள்கிறேன். -சண்முகானந்தம், சமூக ஆர்வலர், மழையூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#58228

சிறுபாலம் சேதமாகி பள்ளம்

சிறுபாலம் சேதமாகி பள்ளம்சாலை

ஆரணி பழைய பஸ் நிலைய வெளி வளாகத்தில் பஸ்கள் வெளியே வரும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாய் மேல் போடப்பட்ட சிறுபாலம் சேதமாகி திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் தினமும் வெளியே வரும் பஸ்கள், இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் சிக்குகின்றன. பள்ளி மாணவ, மாணவிகள் கீழே விழுந்து ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆரணி நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? -சிவானந்தம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:13 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#58226

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

செங்கம் சுற்று வட்டார கிராமங்களான மண்மலை, கரியமங்கலம், கொட்டகுளம், இறையூர் ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையோர தள்ளுவண்டி கடைகள், சிற்றுண்டி கடைகள், உணவகங்கள், இறைச்சிக்கடைகளில் இருந்து வீசப்படும் கழிவுகளை சாப்பிடுவதற்காக தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அப்போது தெருநாய்கள் சண்டையிட்டுக் கொள்கின்றன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணப்பன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:09 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#58219

குடிநீர் கிணறுக்கு மூடி போட வேண்டும்

கழிவுநீர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் பேராயம்பட்டு மலையடிவாரத்தில் குடிநீர் கிணறு உள்ளது. அங்கிருந்து தண்ணீர் எடுத்து குழாய்கள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தக் கிணறுக்கு மூடி இல்லை. ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் கிணறுக்கு மூடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். -அறிவழகன், தண்டராம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:07 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#58214

முழுமை பெறாத கிராம சேவை மைய கட்டிடப்பணி

மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியம் சின்னக்கல்லப்பாடி கிராமத்தில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் கட்டுமானப் பணி முழுமை பெறவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிராம சேவை மைய கட்டிடத்தை கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -ராமையன், சின்னக்கல்லப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:08 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58053

மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறுமற்றவை

வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு பகுதியில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாலை நேரங்களில் சாலையில் நின்று ஓய்வெடுக்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சாலைகளில் செல்லும் பொதுமக்களை மாடுகள் அச்சுறுத்துகின்றன. எனவே மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிங்காரவேல், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick