சாலைகளை விரிவாக்கம் செய்வார்களா?

Update: 2022-12-04 13:06 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட போர்டின் பேட்டை தெரு, வெங்கட்ராய பிள்ளை தெரு, லிங்கா ரெட்டி தெரு ஆகிய 3 தெருக்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. 3 தெருக்கள் முதல் பாட்டிக்குளம் வரை உள்ள சாலை குறுகியதாக இருக்கிறது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மாறி செல்ல சிரமமாக உள்ளது. இதனால் வாகன ‌ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேற்கண்ட 3 தெரு சாலையில் உள்ள ஆக்கிரமிப்ைப அகற்றி சாலைகளை விரிவாக்கம் செய்வார்களா?

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்