தார் சாலை அமைப்பது எப்போது?

Update: 2022-11-09 14:11 GMT

வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோவில் தெரு வழியாக செல்லும் சாலை ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்தது. அந்தச் சாலையை பொக்லைன் உதவியோடு பெயர்த்தெடுத்தனர். பெயர்த்தெடுத்த தார் சாலை கழிவுகளை அதே சாலையில் போட்டு ரோலர் மூலமாக அழுத்தி சமன் செய்துள்ளனர். தற்போது மழைப் பெய்து வருவதால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து நடக்க முடியாமல் உள்ளது. வாகனங்களும் செல்ல சிரமமாக உள்ளது. தார் சாலை அமைப்பது எப்போது? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், வேலூர்.

மேலும் செய்திகள்