திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் பசலிகுட்டை கருப்பன் கோவில் அருகே ஒரு குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். அந்தக் குடிநீர் தொட்டியைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வெங்கடேசன், பசலிகுட்டை.