வெம்பாக்கம் தாலுகா வடஇலுப்பை கிராமத்தில் சாலையோரம் ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு உள்ளது. அந்த அடிபம்பு பழுதடைந்துள்ளது. இதேபோல் பல இடங்களில் அடிபம்பு பழுதடைந்துள்ளன. அந்த அடிபம்புகளை பழுது நீக்கி சரி செய்து கொடுத்தால் பொதுமக்களின் தண்ணீர் பிரச்சினையை போக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அ.அர்ச்சனா சமூக ஆர்வலர், வடஇலுப்பை கிராமம்.