வீணாக செல்லும் தண்ணீர்

Update: 2022-08-18 11:28 GMT

பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகம் எதிரே 9 லட்சம் லிட்டர் குடிநீர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இரவு நேர பணியாளர்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் சம்ப்களில் தண்ணீர் நிரம்பி சுமார் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் வீணாகிறது. இதுகுறித்து பல முறை நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை, தண்ணீர் வீணாகி செல்வதைத் தடுத்து பராமரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்லுமிரா முஹம்மத்உசாமா,  பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்