ஆரணி நகராட்சி அலுவலகத்தை அடுத்த குடிநீர் நீரேற்றும் நிலையம் அருகில் மெயின் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. ஆரணி அரசு மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய சாலையோரம் ஆறாக தண்ணீர் ஓடி தேங்குகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. ஆகையால், குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயராஜா, ஆரணி.