வேலூர் பழைய பைபாஸ் சாலை ஓரம் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையோரம் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் மற்றும் நடந்து செல்பவர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயகிருஷ்ணன், வேலூர்.