மேட்டூர் அடுத்த பாரப்பட்டி பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது என்று ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரி செய்தனர். இதனால் குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், ‘தினத்தந்தி’க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.