கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வாரத்தில் 2 நாட்கள்தான் குடிநீர் வருகிறது. அதுவும், மண் கலந்து சற்று மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனால் சுகாதாரமற்ற குடிநீர் என்பது தெளிவாகிறது. இதை எப்படி குடிக்க முடியும்?. பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுகாதாரமான குடிநீர் வழங்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.