பல்லடம் சாலையில் இருந்து தாராபுரம் சாலையை இணைக்க பழவஞ்சிபாளையம், கே.செட்டிபாளையம் வழியாக சாலை உள்ளது. இந்த சாலையை தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சாலையில் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும், சாலையில் பல இடங்களில் சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் குடிநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைக்க வேண்டும்.