பென்னாகரம் அடுத்த மாங்கரை கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு போதுமான தண்ணீர் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாங்கரை கிராமத்திற்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.