புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி 3-வது வார்டு பகுதியில் உள்ள தெரு குழாய்களில் போதுமான அளவு குடிநீர் வருவதில்லை. சிலர் மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால், மற்ற பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுத்து, அனைத்து மக்களுக்கும் சீரான முறையில் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.