செங்கம் தாலுகா பக்கிரிபாளையம் ஊராட்சி 8-வது வார்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பயனற்ற நிலையில் உள்ளது. அதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து குழாய்கள் பதித்தும் பயன் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-நவாப்ஜான், பக்கிரிபாளையம்.