மூடப்படாத குடிநீர் குழாய் பள்ளம்

Update: 2025-12-14 18:15 GMT

ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு காரை ஏஜென்ட் பெருமாள் தெருவில் கடந்தசில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் சரி பார்ப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பள்ளம் அப்படியே உள்ளது, இன்னும் மூடவில்லை. அந்த வழியாக செல்வோர் பள்ளத்தில் தடுமாறி விழ வாய்ப்புள்ளது. பள்ளத்தை மூட வேண்டும் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்