திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா 102:ரெட்டியூர் ஊராட்சி ராணிப்பேட்டை கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து காரணம் கேட்டால் ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் குழாயில் உடைப்போ அல்லது ஓட்டையோ விழுந்து தண்ணீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு வருவதில்லை எனப் பதில் கூறுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்துக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய முன்வர வேண்டும்.
-முத்து, ரெட்டியூர்.