வத்தலக்குண்டு ஒன்றியம் கோம்பைப்பட்டி அருகே ரெட்டியபட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து உள்ளது. அதோடு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் குடிநீர் தொட்டி எந்தநேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைந்து சீரமைக்க வேண்டும்.