பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டன. பின்னர் சரிவர மூடாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக 15, 17, 22-வது தெருக்களில் மிகவும் மோசமாக உள்ளது. பள்ளி வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்வதால் விபத்து ஏற்படும் முன் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.