மணலூர்பேட்ட- கடுவனூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வாணாபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. தற்போது சுட்டெரித்து வரும் வெயிலால் குடிநீரின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் மக்கள் காசுகொடுத்து தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, வாணாபுரம் ஊராட்சிக்கும் கூட்டுக்குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.