ஒகேனக்கல்லுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக, நீர்வீழ்ச்சியின் நுழைவு பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொட்டிக்கு மின்சாரம் இருக்கும்போதெல்லாம் மின் மோட்டார் இயங்கிக் கொண்டே உள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மட்டுமே மோட்டார் நிற்கும். இதனை பராமரிப்பவர்கள் யாரும் இல்லை. இதன் காரணமாக எப்போதும் குடிநீர் தொட்டி நிரம்பி தண்ணீர் பாதைகளில் ஓடி, வீணாகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?