குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2026-08-23 19:17 GMT

ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை 17, 18-வது வார்டுகளில் சிறு மின் விசை குடிநீர் தொட்டிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தச் சிறு மின்விசை குடிநீர் தொட்டிகளில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இது சம்பந்தமாக ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்ய முன்வருவார்களா?

-நித்தியானந்தம், காரை.

மேலும் செய்திகள்