புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தில் வடக்குத்தெரு சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுவதோடு, குடிநீரும் வீணாகி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாயை சீரமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.