திருவண்ணாமலையில் அடிக்கடி குழாய்கள் உடைந்து சாலையில் குடிநீர் வீணாக வெளிேயறும் சம்பவங்கள் நடந்து வருகிறது. திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் கிழக்கு போலீஸ் நிலையம் அருகில் சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறியது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், மழை நீரை சேமிக்க வேண்டும் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வரும் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஞானசேகரன், திருவண்ணாமலை.