ஓடையில் கலக்கும் கழிவுநீர்

Update: 2026-08-16 14:03 GMT

கோத்தகிரி அருகே நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதுமந்து பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு உரிய குடிநீர் வசதி இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. அந்த பகுதி மக்கள் ஓடை நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அந்த ஓடை நீரில் கழிவுநீர் கலந்து வருவதால் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் அந்த பகுதிக்கு உரிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்