குழாயில் உடைப்பு

Update: 2026-08-16 14:00 GMT

கூடலூர் முத்தமிழ் நகரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. ஏற்கனவே பருவமழை சரியாக பெய்யாத நிலையில் நீலகிரியில் சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுபோன்ற சூழலில் குழாய் உடைப்பை சீரமைக்காமல் விடுவது வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்