தூர்வார வேண்டிய குட்டை

Update: 2026-08-16 13:13 GMT

ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் நுகர்வோர் வாணிப கழகம் வட்ட கிடங்கு அருகிலுள்ள நரிபால் குட்டை புதர்கள் மண்டி கிடக்கிறது. பொதுமக்களும் குப்பைகளை ஏரிக்கரையில் கொட்டி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், எதிரில் இயங்கும் ஐ.டி.ஐ., அரசு கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையின் இருபுறங்களிலும் பஸ் நிறுத்தம் உள்ளதால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஓசூர் மாநகராட்சி நரிபால் குட்டை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்