வீணாகும் குடிநீர்

Update: 2026-08-16 14:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி சேர்வைகாரன்பட்டி மேற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் கடந்த 6 மாத காலமாக குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், தேங்கும் நீரால் தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே உடைந்துள்ள குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்