பந்தலூர் தாலுகா சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-1) பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகிக்கப்படுவது இல்லை. இதனால் காலி குடங்களுடன் அருகில் உள்ள பகுதிகளுக்கு அலைந்து திரியும் நிலை உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும்.