ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2026-08-16 17:08 GMT

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒன்பதாம்பாலிகாடு கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி பின்புறம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யபட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் தொட்டி விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. எனவே அசம்பாதவிதங்கள் நடக்கும் முன்பு ஆபத்தான குடிநீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும்.


மேலும் செய்திகள்