ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கங்காபுரம் பள்ளிக்கூடம் அருகே பதிக்கப்பட்டுள்ள ஊராட்சிக்கோட்டை குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?