எலச்சிபாளையம் அடுத்த போக்கம்பாளையம் ஊராட்சி காந்திநகரில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. இந்த தொட்டியை வருடக்கணக்கில் சுத்தம் செய்யாமல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் அசுத்தமாகவும், துர்நாற்றத்துடனும் இருக்கிறது. இதனால் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முறையாக பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.