சிவகங்கை- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓ.புதூர் பஞ்சாயத்து அண்ணாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.