திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஒன்றியம் நாவலூர் குட்டப்பட்டு ஊராட்சி நாவலூர் கிராமத்திற்கு காவிரி குடிநீர் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருவதுடன், நீண்ட நாளாக சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி குடிநீரை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.