தண்ணீரின்றி மாணவர்கள் அவதி

Update: 2026-08-23 13:54 GMT

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்விற்கு தயாராக இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் ஏழை மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால் தண்ணீர் பிரச்சினை காரணமாக கழிவறை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நிர்வாகத்திடம் தெரிவித்தால் கண்டுகொள்வதில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி மின்மோட்டாரை சரி செய்து கழிவறைக்கு தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.


மேலும் செய்திகள்