சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2026-08-30 07:08 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரிய களக்காட்டூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து உள்ளது. அதன் தூண்களில் கான்கீரிட் பெயர்ந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சீரமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்