சிறு மின்விசை தொட்டி பழுது

Update: 2024-01-21 17:07 GMT

பேரணாம்பட்டில் ஆம்பூர் நெடுஞ்சாலை ஹைரோடு பகுதியில் மக்கள் பயன்பாட்டில் இருந்த சிறுமின்விசை குடிநீர் தொட்டி பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. இதை, நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இந்தப் பகுதி மக்கள் குடிநீருக்காக அதிக தூரம் சென்று சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிறு மின்விசை தொட்டியை பழுது நீக்கி குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்